RSI INDICATOR TUTORIAL TAMIL | RSI இண்டிகேட்டர் பற்றி விளக்கம்

வணக்கம் நண்பர்களே , இந்த பதிவில் நாம் RSI  இண்டிகேட்டர் பற்றி பார்ப்போம். பல நூறு இண்டிகேட்டர் இருந்தாலும் பத்திற்கு குறைவான இண்டிகேட்டர் மட்டுமே உலகம் முழுவதும் பெரும்பாலும் பயன்படுத்த படுகிறது . அதில் பழமையான இண்டிகேட்டர் eh அதிகம் அதில் ஒரு இண்டிகேட்டர் தான் RSI  . இண்டிகேட்டர் என்றால் வேறொன்றும் இல்லை மார்க்கெட்டின் அடுத்த நகர்வை முன்கூட்டியே அறிய பயன்படுத்தும் முறையாகும் . ஆனால் வெறும் இண்டிகேட்டர் மட்டும் வைத்து வர்த்தகம் செய்து விட முடியாது , வர்த்தகம் செய்யும் போது நமது கணிப்பை உறுதி படுத்த படுத்துவது தான் இண்டிகேட்டர் . அப்படி பட்ட RSI  இண்டிகேட்டர் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் .

RSI BASIC METHOD:

RSI இண்டிகேட்டர் கோடு 70 மேல் சென்றால் ஓவர் பாட் என்றும் அந்த நிலையில் SELL எடுக்க வேண்டும் அர்த்தம் , அதே போல் 30 கீழ் சென்றால் buy எடுக்க வேண்டும் என்றும் அர்த்தம் , ஆனாலும் இது அனைத்து நேரமும் வேலை செய்யாது . நாம் தோல்வி அடைய வாய்ப்பு உண்டு .எனவே இந்த இண்டிகேட்டர் பயன்படுத்த இன்னும் சில முறைகள் தெரிந்து இருக்க வேண்டும் .

RSI DIVERGENCE METHOD:

இது RSI  வைத்து மார்கெட்டை கணிக்க பயன்படுத்தும் அடுத்த முறையாகும் . கீழே . இந்த முறைகளை பற்றி படத்தை பகிர்ந்துள்ளேன் . மார்க்கெட் price  um RSI  divergence எதிராக போகும் போது நமக்கு வர்த்தகம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் . இந்த முறையை RSI LINE மற்றும் சிக்னல் லைன் வைத்தும் DIVERGENCE பார்க்க முடியும் . DIVERGENCE உருவாக காரணம் குறிப்பாக தானாக வர்த்தகம் மூலம் உயந்து கொண்டிருந்த volume ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் குறைய தொடங்கும். ஆனால் சந்தையின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் . இது எல்லா நேரமும் நடை பெறாது . அதிக நேரம் இது ஒரு resistance பக்கத்திலோ அல்லது ஒரு சப்போர்ட் பக்கத்திலோ தான் நடைபெறும் காரணம் சந்தை மதிப்பு மேலே செல்ல செல்ல மார்க்கெட்டில் வாங்க விரும்புவோர் எண்ணிக்கை குறைய தொடங்கும் அதை தான் நாம் volume என்று கூறுகிறோம் . அதனை தெரிந்து கொண்டு அந்த இடத்தில உருவாகும் divergence வைத்து நாம் வர்த்தகம் செய்யலாம் . அதனை உறுதி படுத்த  நாம் candle பார்க்கலாம் அல்லது மார்க்கெட் ட்ரெண்ட் மாறுவதை வைத்து முடிவு செய்யலாம் அல்லது ட்ரெண்ட் லைன் வரைந்து அதை உடைத்து சந்தை கீழ் இறங்கும் போது அல்லது மேல் ஏறும் போது பண்ணலாம் . 

ஒவ்வொருத்தரும் அவர்களின் வர்த்தக முறைக்கேற்ப ஒவ்வொரு முறையை பயன் படுத்துவார்கள் . இந்த divergence வர்த்தககம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்த முறையாகும் . இதை சரியாக பயன்படுத்தி வர்த்தகம் செய்ய தொடங்கினால் அதிகம் சம்பாதிக்க வாய்ப்புண்டு .காரணம் இந்த முறையில் மட்டும் தான் ஒரு ட்ரெண்டிங் ஆரம்பத்தையும் , இறுதியையும் கணிக்க முடியும் . அதிக ரிஸ்க் ratio கொடுக்கும் முறையும் இது தான் . macd போன்று rsi பயன்படுத்தியும் இதனை கணிக்கலாம் .

அதற்கான வீடியோ நமது youtube சேனலில் உள்ளது . சரியாக பயிற்ச்சி செய்து இந்த முறையில் வெற்றி காண வாழ்த்துக்கள் . இதனை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழ்காணும் விடியோவை பார்க்கவும் . அதில் தெளிவான விளக்கம் உள்ளது. நன்றி . இதே போல மேலும் தகவலுக்கு நமது தளத்தை தொடந்து பார்வையிடவும் . புதிதாக வர்த்தகம் செய்ய விரும்போவோர் கீழ் உள்ள லிங்க் மூலம் கணக்கு தொடங்கி கொள்ளவும் . நன்றி . COINEX கணக்கு தொடங்க  CLICK HERE 

, ,

6 thoughts on “RSI INDICATOR TUTORIAL TAMIL | RSI இண்டிகேட்டர் பற்றி விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *