MACD COINEX BEGINNERS TUTORIALS IN TAMIL, HERE I EXPLAINED ABOUT MACD INDICATOR BASIC AND ADVANCE IN TAMIL LANGUAGE.

வணக்கம் நண்பர்களே , இந்த பதிவில் நாம் macd இண்டிகேட்டர் பற்றி பார்ப்போம். பல நூறு இண்டிகேட்டர் இருந்தாலும் பத்திற்கு குறைவான இண்டிகேட்டர் மட்டுமே உலகம் முழுவதும் பெரும்பாலும் பயன்படுத்த படுகிறது . அதில் பழமையான இண்டிகேட்டர் eh அதிகம் அதில் ஒரு இண்டிகேட்டர் தான் macd . இண்டிகேட்டர் என்றால் வேறொன்றும் இல்லை மார்க்கெட்டின் அடுத்த நகர்வை முன்கூட்டியே அறிய பயன்படுத்தும் முறையாகும் . ஆனால் வெறும் இண்டிகேட்டர் மட்டும் வைத்து வர்த்தகம் செய்து விட முடியாது , வர்த்தகம் செய்யும் போது நமது கணிப்பை உறுதி படுத்த படுத்துவது தான் இண்டிகேட்டர் . அப்படி பட்ட macd இண்டிகேட்டர் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் .
இந்த MACD ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்க பட்டது ஆகும். இந்த இன்டிகேட்டர் 1970யில் Gerald Appel என்பவர் கண்டுபிடித்தார்.பிறகு
ஹிஸ்டோகிராம் பயன்பாட்டை 1986 யில் Thomas Aspray என்பவர்
கண்டுபிடித்தார்.
இந்த இண்டிகேட்டர் அனைத்து கால அளவுகளிலும் பயன்படுத்தலாம் இருந்தாலும் பெரிய கால அளவுகளில் அதிக accuracy இருக்கும் .
MACD LINE என்பது 12 நாள் EMA – 26 நாள் EMA கழித்து இந்த MACD line வரயப்படுகிறது. MACD line சிக்னல் வரியை தொட்டு வளைந்து சிக்னல்
வரிக்கு முன் மேல் நோக்ககி சென்றால் நாம் Buy Order எடுக்கலாம். இதுவே கீழ் நோக்கி வளைந்து சென்றால் sell order எடுக்களாம். ஒரு வரியை கடந்து மற்றொன்று செல்வது ஆகும் .
சிக்னல் கோட்டிற்கு எதிராக MACD கோட்டின் மதிப்பையும் மைனஸையும் எடுத்துக் கொள்ளுங்கள்.ஹிஸ்டோகிராம் zero line க்கு கீழ் அதிகமாக நீண்டு கொண்டு சென்று பின் குறைய தொடங்கும்.அதன் பிறகு zero line மேல் நீண்டு கொண்டு செல்லும் போது நாம் Buy order எடுக்கலாம். இது ஹிஸ்டாக்ராம் வர்த்தக முறையாகும் .
கடைசியாக சிக்னல் லைன் இது macd லைனை கடந்து ஸிரோ லைனையும் கடந்து மேல் நோக்கி செல்லும் போது அது தெளிவான buy ஆர்டர் ஆக எடுத்து கொள்ளலாம் . அதே போல மேலிருந்து கீழ் இறங்கும் போதும் macd லைனை கடந்து கீழே ஸிரோ லைனை தாண்டி கீழே வரும் போது அதனை sell signalaga எடுத்து கொள்ளலாம் .

இதுவே MACD இண்டிகேட்டர் பயன் படுத்துவதற்கான எளிய மற்றும் அடிப்படை முறையாகும் .
ஹிஸ்டாக்ராம் volume குறைவதை convergence என்றும் அதாவது volume குறைந்து குவிதல் , volume அதிகமாகி ஹிஸ்டாக்ராம் மேல்நோக்கி செல்வதை divergergence என்றும் சொல்லுவார்கள் இதனை வைத்தும் நாம் வர்த்தகம் செய்யலாம் .
இதில் நான்கு முறைகள் உண்டு .
Bullish DivergenceBearish DivergenceBullish hidden divergencebearish hidden divence

இது MACD வைத்து மார்கெட்டை கணிக்க பயன்படுத்தும் அடுத்த முறையாகும் . கீழே . இந்த முறைகளை பற்றி படத்தை பகிர்ந்துள்ளேன் . மார்க்கெட் price um MACD divergence எதிராக போகும் போது நமக்கு வர்த்தகம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் .
இந்த முறையை MACD LINE மற்றும் சிக்னல் லைன் வைத்தும் DIVERGENCE பார்க்க முடியும் . DIVERGENCE உருவாக காரணம் குறிப்பாக தானாக வர்த்தகம் மூலம் உயந்து கொண்டிருந்த volume ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் குறைய தொடங்கும். ஆனால் சந்தையின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் . இது எல்லா நேரமும் நடை பெறாது . அதிக நேரம் இது ஒரு resistance பக்கத்திலோ அல்லது ஒரு சப்போர்ட் பக்கத்திலோ தான் நடைபெறும் காரணம் சந்தை மதிப்பு மேலே செல்ல செல்ல மார்க்கெட்டில் வாங்க விரும்புவோர் எண்ணிக்கை குறைய தொடங்கும் அதை தான் நாம் volume என்று கூறுகிறோம் . அதனை தெரிந்து கொண்டு அந்த இடத்தில உருவாகும் divergence வைத்து நாம் வர்த்தகம் செய்யலாம் .
அதனை உறுதி படுத்த நாம் candle பார்க்கலாம் அல்லது மார்க்கெட் ட்ரெண்ட் மாறுவதை வைத்து முடிவு செய்யலாம் அல்லது ட்ரெண்ட் லைன் வரைந்து அதை உடைத்து சந்தை கீழ் இறங்கும் போது அல்லது மேல் ஏறும் போது பண்ணலாம் . ஒவ்வொருத்தரும் அவர்களின் வர்த்தக முறைக்கேற்ப ஒவ்வொரு முறையை பயன் படுத்துவார்கள் . இந்த divergence வர்த்தககம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்த முறையாகும் . இதை சரியாக பயன்படுத்தி வர்த்தகம் செய்ய தொடங்கினால் அதிகம் சம்பாதிக்க வாய்ப்புண்டு .காரணம் இந்த முறையில் மட்டும் தான் ஒரு ட்ரெண்டிங் ஆரம்பத்தையும் , இறுதியையும் கணிக்க முடியும் . அதிக ரிஸ்க் ratio கொடுக்கும் முறையும் இது தான் . macd போன்று rsi பயன்படுத்தியும் இதனை கணிக்கலாம் . அதற்கான வீடியோ நமது youtube சேனலில் உள்ளது .
சரியாக பயிற்ச்சி செய்து இந்த முறையில் வெற்றி காண வாழ்த்துக்கள் . இதனை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழ்காணும் விடியோவை பார்க்கவும் . அதில் தெளிவான விளக்கம் உள்ளது. நன்றி .
இதே போல மேலும் தகவலுக்கு நமது தளத்தை தொடந்து பார்வையிடவும் . புதிதாக வர்த்தகம் செய்ய விரும்போவோர் கீழ் உள்ள லிங்க் மூலம் கணக்கு தொடங்கி கொள்ளவும் . நன்றி . COINEX கணக்கு தொடங்க CLICK HERE
இதனை பற்றி தெளிவாக கீழ் காணும் வீடியோவில் பதிவிட்டுள்ளேன்.
Nice Article
Nice
Nice
Good
Good
what is tinder , browse tinder for free https://tinderdatingsiteus.com/
dating site https://freedatingsiteall.com