கிரிப்டோகரன்சி என்றால் என்ன? – முழு விளக்கம்

கிரிப்டோகரன்சி என்பது இணையவழி பண பரிமாற்றத்திற்காக உருவாக்க பட்டதாகும் , தற்போது பண பரிமாற்றத்திற்காகவும், வர்த்தகம் செய்யவும் பயன்படுத்த பட்டு வருகிறது , இது பிளாக் செயின் தொழில் நுட்பம் மூலம் உருவாக்க பட்டதாகும், முழுக்க முழுக்க யார் உதவியும் இன்றி பணம் பரிமாற்றம் செய்யவும், உங்கள் பண பரிமாற்றம் உங்களுக்கு மட்டும் தெரியுமாறு பயன்படுத்தவும் கிரிப்டோ கரன்சி காயின்கள் பயன்படுகின்றன . சரி இதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.

cryptocurrency intro in tamil

பொதுவாக வங்கி பணவர்தனை மூலம் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு அனுப்ப நமக்கு அவரின் அக்கௌன்ட் நம்பர் மற்றும் முகவரி தேவை படும், இதன் மூலம் நாம் பணம் அனுப்புவோம் , பணமும் உடனே பரிமாற்றம் அடையும் . ஆனாலும் இது மையப்படுத்த பட்ட பண பரிமாற்றம் ஆகும் .

நீங்கள் செய்யும் பணபரிமாற்றத்தை வாங்கி உரிமையாளர்களால் பார்க்க முடியும் கட்டுப்படுத்த முடியும் . உங்கள் வங்கி கணக்கில் உள்ள தொகை அனைத்தும் பார்க்கலாம் , அவர்கள் நினைத்தால் அதை மற்ற கணக்கிற்கு மாற்றவும் முடியும் . அதே போல இந்த தொழிலநுட்பத்தை ஹேக் செய்யவும் முடியும் . இது எல்லாவற்றிக்கும் மாற்றாக வந்தது தான் கிரிப்டோகரன்சி . இன்று உலக அளவில் பிரபலமடைந்து வருவதற்கான முக்கிய காரணமும் அது தான் . அதே போல வங்கியில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப சில நாட்கள் ஆகும் அதே போல அதிக கட்டணமும் செலுத்த வேண்டும் . இதை எல்லாவற்றையும் மாற்ற உருவாக்க பட்டது தான் க்ரிப்டோ கரன்சி .

coinex exchange crypto coin list

அதில் முதன்மையாகவும் அனைவராலும் பயன்படுத்த பட்டு கொண்டிருப்பது பிட்காயின் ஆகும் , இதனை போல இன்றி நூற்று கணக்கான காயின்கள் உள்ளன . சில பணபரிமாற்றத்திற்கும் சில வர்த்தகம் செய்யவும் உருவாக்க பட்டது., இவைகள் பிளாக் செயின் தொழில் நுட்பம் மூலம் செயல் படுவதால் இதனை முடக்கவோ , ஹேக் செய்யவோ முடியாது . உலகில் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் இதனை வெகு சில நிமிடங்களில் அனுப்ப முடியும், இதனை யாராலும் கட்டு படுத்த முடியாது . வருங்காலங்களில் இதனை வங்கிகளில் கூட பயன்படுத்த முடிவு செய்துள்ளனர் , ஒரு சில வங்கிகளில் இப்போதே பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர் , பணப்பரிமாற்றம் மட்டும் இன்று பொருட்கள் வாங்க விற்கவும் க்ரிப்டோ கரன்சி பயன்படுத்த பட்டு வருகிறது, இது மிக விரைவாகவும் நம்பக தன்மையுடனும் இருப்பதால் , வரும்காலத்தில் இது உலக நாடுகள் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் .

இப்பொது இதனை பயன்படுத்தி வர்த்தகமும் செய்யலாம் , அதற்கான நெறைய வர்த்தக தளங்கள் உருவாக்க பட்டு வருகின்றன . அதில் coinex ம் ஒரு வர்த்தக தளமாகும் . இங்கு நூற்றுக்கு மேற்பட்ட காயின்கள் வர்த்தகம் செய்ய படுகிறது , மேலும் இதனை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பயன்படுத்தலாம் . இதில் பல தரப்பட்ட காயங்களும் வர்த்தக முறையும் உள்ளது. மேலும் க்ரிப்டோ கரன்சி பற்றி தெரிந்து கொள்ள கீழ்காணும் வீடியோ பார்க்கவும் , நன்றி .

, , ,

8 thoughts on “கிரிப்டோகரன்சி என்றால் என்ன? – முழு விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *