COINEX வர்த்தக தளத்தில் உள்ள மூன்று வகையான வர்த்தக முறை

இந்த பதிவில் coinex வர்த்தக தளத்தில் உள்ள மூன்று வகையான வர்த்தக முறைகளை பற்றி பாப்போம் . ஸ்பாட் டிரேடிங் , மார்ஜின் டிரேடிங் மற்றும் காண்ட்ராக்ட் டிரேடிங் . பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் வர்த்தக முறை ஆகும்,  நாம் எந்த கரன்சி வேண்டுமானாலும் வாங்கி சேமித்து வைத்து கொள்ளலாம்.. குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பதன் மூலம் லாபம் சம்பாதிக்க முடியும் . சரி இந்த மூன்று முறைகளை பற்றியும் சற்று விரிவாக பாப்போம் .

COINEX TAMIL

ஸ்பாட் டிரேடிங் :

இந்த முறை வர்த்தகத்தில் எந்த வித வரைமுறைகளை கிடையாது , ஆனாலும் நீங்கள் வாங்கும் கரன்சிக்கு மொத்த பணமும் கொடுத்து வாங்க வேண்டும் . இதனை நீங்கள் லாபம் வரும் வரை சேமித்து வைத்து விற்கலாம்,

இதற்கு கால வரைமுறை இல்லை . பெரும்பாலும் இந்த முறையையே அனைவரும் பயன்படுத்துகிறார்கள் . காரணம் தினமும் மார்க்கெட்டை பார்த்து கொண்டிருக்க வேண்டியதில்லை . புதிதாய் வருபவர்களுக்கு நான் சொல்லி கொடுப்பதும் இந்த முறை தான். மார்க்கெட் மேலே செல்வது போன்று இருக்கும் காயினை மட்டும் எடுத்து குறைந்த விலையில் வாங்கி வைக்க வேண்டும் , விலை அதிகமான பிறகு மெதுவாக விற்று பணமாக மாற்றி கொள்ளலாம் .

COINEX SPOT TRADING

மார்ஜின் டிரேடிங்

இந்த முறையில் நம்மிடம் குறைந்த பணம் இருந்தாலும் , coinex வர்த்தக தளத்தில் கடன் வாங்குவதன் மூலம் அதிக பணத்திற்கு வர்த்தகம் செய்யலாம். CoinEx Index விலையை சரியாக தருகிறார்கள் , இதன் மூலம் சந்தை அபாயங்களை தவிர்க்கலாம். இதன் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கவும் முடியும்,  3x  5x வரை வர்த்தகம் செய்ய முடியும் . எனவே இந்த முறையில் இழப்புகளும் ஏற்படலாம் . எனவே இந்த முறையில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் . இதற்கும் காலவரைமுறை இல்லை . அதே போல் நீங்கள் கடன் வாங்கி செய்யும் வர்த்தகத்தின் வட்டி தினமும் கணக்கிடப்படும் .

COINEX MARGIN TRADING
COINEX MARGIN BORROW

கான்ட்ராக்ட் டிரேடிங் :

இந்த முறை மிக அதிகம் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள் . இந்த முறையில் நூறு மடங்கு வரை கடன் வாங்கி வர்த்தகம் செய்யலாம் இதில் மிக அதிகம் இலாபமும் அதிகம் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புண்டு . இந்த வர்த்தகத்தை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முழுவதும் முடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை . கிராஸ் மார்ஜின் எடுப்பதன் மூலம் நமது லிகுடிட்டி அளவை அதிகரிக்க முடியும் ஆனால் நமக்கு எதிராக மார்க்கெட் சென்றால் மொத்தமா பணத்தை இழக்க நேரிடும்.. இந்த மூன்று முறைகளில் நாம் வர்த்தகம் செய்ய முடியும் .

PERPETUAL CONTRACT TRADING
LEVERAGE AND CROSS MARGIN

மேலும் தகவலுக்கு கீழ் உள்ள வீடியோ இணைப்பை பார்க்கவும் .

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *