விளிம்பு வர்த்தகம் [MARGIN TRADING] பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம் . விளிம்பு வர்த்தகம் என்பது வர்த்தகத்தில் ஒரு முறை ஆகும். சிறிய பண முதலீட்டில் வர்த்தகம் செய்வோர் பெருமளவு பயன்படுத்தும் வர்த்தக முறை இது. காரணம் நீங்கள் உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து உங்கள் பணத்தை போன்று மூன்று மடங்கு முதல் பத்து மடங்கு வரை வர்த்தக தளத்திடம் இருந்து கடன் வாங்கலாம். அதனை வைத்து வர்த்தகம் செய்து பணம் சம்பாதித்து விட்டு திருப்பி செலுத்தி கொள்ளலாம். நீங்கள் திருப்பி செலுத்தும் கால அளவை பொறுத்து சிறிய அளவு வட்டி வசூலிக்க படும் . இது மிக சிறிய தொகை மட்டும் தான் . எனவே தான் பலர் விளிம்பு வர்த்தகம் செய்கிறார்கள் .

ஆனால் அனைத்து காயின்களிலும் இந்த வர்த்தகம் செய்ய முடியாது, அதிக அளவு வர்த்தகம் நடைபெறும் காயின்களில் மட்டுமே இந்த அம்சம் உண்டு . மேலே படத்தில் உள்ளது போல் டிக் செய்து நீங்கள் அந்த காயினை தனியாக பிரித்து அறியலாம் . மற்றும் 10 usd இருந்தாலே இந்த வர்த்தகம் செய்யலாம் .
என்ன எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் ?


பணத்தை ஸ்பாட் அக்கௌன்ட் இல் இருந்து மார்ஜின் அக்கௌன்ட் [விளிம்பு கணக்கு] க்கு மாற்ற தெரிய வேண்டும் . மேலே படத்தில் உள்ளது போல் transfer அதை கிளிக் செய்து பணத்தை இங்கு கொண்டு வர வேண்டும். அடுத்து borrow [கடன்] அதை கிளிக் செய்து கடன் வாங்க வேண்டும் . இது நீங்கள் தேர்வு செய்த காயினை பொறுத்து [3x to 10x] மாறுப்படும். கடன் வாங்கிய பிறகு அதனை வைத்து வர்த்தகம் செய்து முடித்து விட்டு திருப்பி செலுத்த வேண்டும். குறிப்பாக விளிம்பு வர்த்தகத்தில் நீங்கள் இருபுறமும் வர்த்தகம் செய்யலாம் . சந்தை மதிப்பு மேலே செல்லும் என்று கணித்தால் buy கீழே செல்லும் என்று கணித்தால் sell எடுக்க வேண்டும் . வர்த்தகம் செய்து லாபம் பார்த்த பிறகு திருப்பி செலுத்தி கொள்ளலாம் . அப்போது repayment என்பதை க்ளிக் செய்து வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் . நாம் வாங்கிய கடனை பொருத்தும் நாம் அதை வைத்திருந்த நாட்களை பொருத்தும் வட்டி செலுத்த வேண்டும் .
இந்த வர்த்தகத்தில் உள்ள ஆபத்துகள் :

மேலே படத்தில் உள்ளது போல liqudation price இதை கவனத்தில் கொள்ள வேண்டும் . சாதாரண வர்த்தகம் செய்யும் போது நமக்கு எந்த ஆபத்தும் கிடையாது , நாம் வாங்கிய காயின் மார்க்கெட் எந்த நிலைமைக்கு சென்றாலும் நம்மிடமே இருக்கும் . ஆனால் விளிம்பு வர்த்தகத்தில் liqudation price வரை தான் நாம் வைத்திருக்க முடியும். அதனை தொட்டு விட்டால் விளிம்பு வர்த்தகத்தில் வாங்கிய காயின் zero ஆகி விடும் . இது பெரும்பாலும் மார்க்கெட்டில் பெரிய மாற்றம் ஏற்படும் போது மட்டுமே நடக்கும். இந்த ஆபத்தை தவிர்க்க stoploss கட்டாயம் பயன்படுத்தவும் .
முதல் முறை வர்த்தகம் செய்யும் போது சிறிய பணமுதலீடு செய்து சோதனை செய்து பார்க்கவும், அப்போது உங்கள் சந்தேகங்கள் தீர்ந்து விடும் . அதன் பின்பு அதிக பண முதலீடு செய்து கொள்ளவும் . இதுவே விளிம்பு வர்த்தகம் செய்யும் முறை ஆகும் . மேலும் இதனை பற்றி வீடியோ வடிவில் பார்க்க வேண்டுமானால் கீழே லிங்க் குடுகிறேன் . coinex -இல் கணக்கு தொடங்கி வர்த்தகம் செய்ய விரும்பினால் கிளிக் HERE >>