COINEX DEX வர்த்தக தளத்தில் உள்ள பயன்கள், கணக்கு தொடங்குதல் , வர்த்தகம் செய்தல் போன்ற வற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் . coinex dex தளம் coinex நிறுவனத்தால் உருவாக்க பட்டது . இதை எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி பயன்படுத்தலாம் . இது முழுக்க எந்த வித நடுநிலையானவர்களும் இல்லாமல் செயல்படுகிறது .
கணக்கு தொடங்குதல் :
உங்களிடம் ஏற்கனவே கணக்கு இருந்தால் மிகவும் எளிதாக உள்ளே நுழையலாம், keystore கொடுத்து அல்லது அந்த 12 வார்த்தைகளை சரியாக கொடுத்து உள்ளே நுழையவும் .

நியூ வால்ட் என்பதை கிளிக் செய்து key store file தரவிறக்கம் செய்யவும் , அடுத்து கடவுச்சொல்லை கொடுக்கவும் . இதனை மிகவும் பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் . இது தொலைந்து விட்டால் திரும்ப எடுக்க முடியாது .
அடுத்து சரிபார்க்க 3 வார்தைகளை சரியாக பதிவிடவும் . சரியாக கொடுத்து விட்டால் அவ்வ்ளோ தான் கடைசியாக
அடுத்து இந்த wallet ஐ தொடங்க ஒரு cet அனுப்பி உறுதி செய்து கொள்ளவும் .

Dex community :
நீங்கள் இங்கு யாரேனும் ஒருத்தருக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி
vote செய்யலாம். இங்கு நெறைய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இருப்பார்கள் . ஒவ்வொருவரும் தனி நோக்கம் உடையவர்கள் .
Dex stacking
இங்கு நீங்கள் cet stacking செய்யலாம் . அதன் மூலம் சிறுதொகை தினமும் சேரும் .வருடத்திற்கு 8.45% வரை தருவார்கள் . நீங்கள் நீண்ட நாளுக்கு சேமிக்க நினைத்தால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் இங்கு ஸ்டாக்கிங் செய்ய coinex வர்த்தக தளத்தில் இருந்து இங்கே அனுப்ப வேண்டும் அடுத்து ஸ்டாக்கிங் அதை கிளிக் செய்து cet ஐ அனுப்ப வேண்டும்.உடனடியாக ஸ்டாக்கிங் தொடங்கி விடும் . ஆனால் அதனை மீண்டும் எடுக்க 21 கால அவகாசம் உண்டு . எனவே உங்களுக்கு அடிக்கடி cet காயினை வித்ட்ராவ் எடுக்க முடியாது . VIAWALLET ஸ்டாக்கிங் செய்ய சிறந்து செயலி ஆகும் .


டோக்கன் :
இந்த பகுதியை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பெயரில் ஏதேனும் டோக்கன் உருவாக்கி கொள்ளலாம் . உங்களுக்கென தனித்துவமான டோக்கன் உருவாக்க இது நல்ல வாய்ப்பாகும் . அதற்கான வழிமுறைகளை படித்து பயன்படுத்தி கொள்ளுங்கள் .
வர்த்தகம்
கடைசியாக பார்க்க போவது coinex dex இல் வர்த்தகம் செய்யும் முறைகளை பற்றியதாகும் .. இதில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை . நீங்கள் coinex தளத்தில் வர்த்தகம் செய்வது போன்றே ஆகும் . ஆனால் இங்கு ஒரு சில குறிப்பிட்ட காயின்கள் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும் .உங்களுக்கு தேவையான காயின்களை வாங்கி நீண்ட நாள் சேமித்து வைத்துக்கொள்ளலாம் .
dex தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் நமது பணம் எப்போதும் நம்மளிடம் இருக்க வேண்டும் என்பதாகும்.


coinex explorer இங்கு நடக்கும் காயின் பரிமாற்றம் அனைத்தையும் இந்த பகுதியில் பார்க்கலாம் .மேலும் இதனை பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோ பதிவை பார்க்கவும்.