கேண்டில்ஸ்டிக் விளக்கம் தமிழில் |CANDLESTICK PATTERN IN TAMIL

கேண்டில்ஸ்டிக் விளக்கம் தமிழில் |CANDLESTICK PATTERN IN TAMIL

COINEX EXCHANGE LOGO

கேண்டில் என்பது மக்களின் மார்க்கெட் பற்றிய மனநிலையும் , மார்க்கெட்டின் அடுத்த கட்ட நகர்வையும் பிரதிபலிப்பதாகும் . பல வகை கேண்டில் இருந்தாலும் நாம் பயன்படுத்துவது ஜப்பான் கேண்டில் ஆகும் . அது மட்டுமே நமக்கு தெளிவான வர்த்தகத்தை கொடுக்கும் . அதனை பொறுத்தே நாம் வர்த்தகம் செய்ய வேண்டும். கீழே உள்ள கேண்டில்கள் பற்றி ஒவ்வொருத்தரும் நன்றாக தெரிந்து வைத்து கொள்ளவேண்டும் .

HAMMER:

இந்த கேண்டில் வர்த்தகத்தில் மிக முக்கியமான கேண்டில் . இந்த கேண்டில் மார்க்கெட்டில் உருவானால், கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கும் மார்கெட் மேல் நோக்கி திரும்பலாம் . எனவே இந்த கேண்டில் மார்க்கெட்டில் வந்தால் அடுத்த கேண்டில் முந்தைய கேண்டிலை தாண்டி செல்லும் போது ஆர்டர் எடுக்க வேண்டும் . இந்த கேண்டில் எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை . குறிப்பாக அதன் bodyசிறியதாகவும் wickநீண்டதாகவும் இருத்தல் வேண்டும் . அதுவே சரியான கேண்டில் ஆகும் .

HAMMER CANDLE TAMIL

SHOOTING STAR:

இது மேல சொன்ன கேண்டிலுக்கு நேர் எதிரான கேண்டில் ஆகும் . மேல் நோக்கி சென்றுகொண்டிருக்கும் மார்க்கெட் இந்த கேண்டில் வந்தால் கீழ் நோக்கி திரும்ப வாய்ப்பு அதிகம் .   இந்த கேண்டிலும் எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை . இந்த கேண்டில் வந்தால் இதற்கு அடுத்த கேண்டில் இதை தாண்டி கீழ்நோக்கி செல்லும் போது ஆர்டர் எடுக்க வேண்டும் . குறிப்பாக அதன் bodyசிறியதாகவும் wickநீண்டதாகவும் இருத்தல் வேண்டும் . அதுவே சரியான கேண்டில் ஆகும் .

shooting star candle tamil

SPINNING TOP:

இந்த கேண்டில் மார்க்கெட்டில் வந்தால் நடுநிலை தன்மை உடையது . இதனை வைத்து முழு முடிவும் எடுக்க முடியாது . பொதுவாக இதற்க்கு அடுத்து உருவாகும் கேண்டில் இதனை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ சுட் செய்து போனால் எடுக்கலாம் . இந்த கேண்டில் எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை . குறிப்பாக அதன் bodyசிறியதாகவும் wickநீண்டதாகவும் இருத்தல் வேண்டும் . அதுவே சரியான கேண்டில் ஆகும்

spinning top candle in tamil

BULLISH ENGULFING:

இந்த கேண்டிலும் மிக முக்கியமான கேண்டில் ஆகும் . இது இரண்டு கேண்டில் சேர்ந்த தொகுப்பாகும் . முதல் கேண்டிலை தாண்டி அடுத்த கேண்டில் சென்றிருக்க வேண்டும் . இந்த கேண்டில் மார்க்கெட் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது உருவானால் மேல் நோக்கி திரும்ப வாய்ப்புகள் அதிகம் .இந்த இரண்டு கேண்டிலை தாண்டி அடுத்த கேண்டில் மேல்  நோக்கி செல்லும் போது ஆர்டர் எடுக்க வேண்டும் .

bullishengulfing candle in tamil

BEARISH ENGULFING:

இந்த கேண்டிலும் மிக முக்கியமான கேண்டில் ஆகும் . இது இரண்டு கேண்டில் சேர்ந்த தொகுப்பாகும் . முதல் கேண்டிலை தாண்டி அடுத்த கேண்டில் சென்றிருக்க வேண்டும் . இந்த கேண்டில் மார்க்கெட் மேல்  நோக்கி சென்று கொண்டிருக்கும் போது உருவானால் கீழ்  நோக்கி திரும்ப வாய்ப்புகள் அதிகம் . இந்த இரண்டு கேண்டிலை தாண்டி அடுத்த கேண்டில் கீழ் நோக்கி செல்லும் போது ஆர்டர் எடுக்க வேண்டும் ..

bearish engulfing candles in tamil

PIERCING PATTERN:

இது பொதுவாக மார்கெட் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது உருவாகும் . இந்த கேண்டில் மார்க்கெட்டில் உருவானால் மார்கெட்டின் திசையை திருப்பலாம் , காரணம் இதுவும் மேலே குறிப்பிட்ட கேண்டில் போலவே உருவாகும் ஆனால் இது முந்தைய கேண்டிலைமுழுவதும் தாண்டி முடியாமல் பாதி மட்டுமே தாண்டி முடியும் . இந்த கேண்டிலும் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்களிக்கும்

.

DARK CLOUD PATTERN:

இது பொதுவாக மார்கெட் மேல் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது உருவாகும் . இந்த கேண்டில் மார்க்கெட்டில் உருவானால் மார்கெட்டின் திசையை திருப்பலாம் , காரணம் இதுவும் மேலே குறிப்பிட்ட கேண்டில் போலவே உருவாகும் ஆனால் இது முந்தைய கேண்டிலைமுழுவதும் தாண்டி முடியாமல் பாதி மட்டுமே தாண்டி முடியும் . இந்த கேண்டிலும் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்களிக்கும் .

.

doji :

இந்த கேண்டில் அடிக்கடி பார்க்கலாம் . இந்த கேண்டிலும் நடுநிலையானது தான் . இதனை வைத்தும் மார்க்கெட்டை முடிவு செய்ய முடியாது. எனவே அடுத்து வரும் கேண்டிலை வைத்து முடிவு செய்து கொள்வது நல்லது . இந்த கேண்டில் மார்க்கெட்டில் சரியான volume இல்லாத போதுஉருவாகலாம் . இந்த கேண்டில் சில நேரம் ஒரு resistanceஅல்லது support இடத்தில் வந்தால் மார்க்கெட்டில் திருப்பு முனையாக அமையலாம் .

doji candlestick pattern in tamil

மேலே உள்ள கேண்டில் நன்றாக தெரிந்து வைத்திருந்தாலே போதும் .இதே போல் இன்னும் பல கேண்டில் இருந்தாலும் நாம் மேலே சொன்ன கேண்டில் மட்டும் பயன்படுத்தி வர்த்தகம் செய்வது நல்லது , மற்ற கேண்டிலை காட்டிலும் இத்தகைய கேண்டிலே அதிக வெற்றி வாய்ப்பினை வழங்கும் அது மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட கேண்டிலில் மட்டும் கவனம் செலுத்தினால் வர்த்தகம் செய்யும் போது ஏற்படும் குழப்பத்தினை குறைக்கலாம் . அதிகம் வர்த்தகம் செய்வதை குறைத்து நல்ல வர்த்தகம் கிடைக்கும் போது மட்டும் செய்தால் இன்னும் வெற்றி வாய்ப்பினை உயர்த்தலாம் . இந்த தகவல் உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன் 

மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும் . THANK YOU, BOOKMARK OUR SITE FOR MORE TECHNICAL UPDATES IN TAMIL.

, , ,

55 thoughts on “கேண்டில்ஸ்டிக் விளக்கம் தமிழில் |CANDLESTICK PATTERN IN TAMIL

  1. When I initially commented I clicked the “Notify me when new comments are added”
    checkbox and now each time a comment is added I get four e-mails with
    the same comment. Is there any way you can remove me from that service?
    Thank you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *